முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று (26), கட்சி தொண்டர்களுடனான சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார் இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினைகள் கல காணப்படுகின்றன. அரசின் நிதிகள் ஒதுக்கப்படவில்லை உள்ளிட்ட பல குறைபாடுகள் ஆராயப்பட்டுள்ளது.
“போர் காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள்,சொத்தளிகள் ஆகியவற்றுக்கான நட்டஈடுகள் வழங்கப்படவில்லை கடந்த ரணில், மைதிரியின் அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் இருந்த ஆட்சிக்காலத்தில் கூட உரிய இழப்பீடுகள் கிடைக்கப்படவில்லை.
“காணாமல் போனவர்கள் விடயத்தில் ஜனாதிபதி காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக சொல்லியுள்ளார் போரில் பலர்காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். படை கட்டுப்பாட்டுப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் அரசிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்” என்றார்.
நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியுள்ளது. இவ்வாறு போர் முடிந்து பத்து ஆண்டுகளாகவும் பல்வேறு பிரச்சனைகள் தீர்வு காணப்படாத நிலமை இருக்கின்றது.
சரியான நேரத்தில் தவறான முடிவினை எடுத்துவிட்டு இன்று ஜனாதிபதியை சந்திக்க கூட்டமைப்பினர் தவம் இருக்கின்றார்கள் எனவும், அவர் கூறினார்.