“சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சு”

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (25)  ஆற்றிய விசேட உரை

பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.