உலகின் மிகவும் கடினமான பயணத் தடைகளை கொரோனா வைரஸ் காரணமாக தங்களை மூடி கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச்சில் அவுஸ்திரேலியா விதித்திருந்தது.
அவுஸ்திரேலியர்களும், ஏனையோரும் கடந்தாண்டு இறுதியிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டபோதும், ஏனைய வெளிநாட்டவர்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், சிட்னி விமான நிலையத்தில் நேற்று கண்ணீருடன் மீளிணைப்புகள் இடம்பெற்றதுடன், படத்தில் காணப்பட்டவாறு தனது தாத்தாவை உணர்ச்சிவசப்பட்டவாறு அவரது பேர்த்தி கட்டியணைத்திருந்தார்.
இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற நிலையில், தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர் அவர்களின் செலவில் 14 நாள்களுக்கு ஹொட்டலொன்றில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.