உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்யப் படைகளையும் திரும்பப் பெறுவதுதான் விவாதங்களுக்கான உக்ரைனின் இலக்கு என்று முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஷ்ய அரசு நடத்தும் செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்துள்ளது.
நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகி உள்ளது.
உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் 1986 இல் பேரழிவின் போது கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகிலுள்ள விலக்கு மண்டலத்தின் மையத்தில் உள்ள பேய் நகரம் என்று அழைக்கப்படும் Pripyat என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளன.
இரு தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு வந்தவுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அனடோலி கிளாஸ் கூறியதாக பெல்டா தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் “இரண்டு மணி நேரத்தில்” தொடங்கும் என அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.