இந்த திட்டமானது சாதாரண தரத்தை நிறைவு செய்துவிட்டு உயர்தரத்தை ஆரம்பிக்கக் காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் பிரதான நோக்கமானது தொழிற்கல்விக்கு பொதுவாக முக்கியமானதாக இருக்கும் தகவல் தொழிநுட்ப திறன் மற்றும் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்வதுடன் மென்திறன்களையும் விருத்தி செய்வதாகும்.
இத்திட்டத்தை முன்னோடியாக நடைமுறைப்படுத்துவதற்காக கல்வியமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
முன்னோடித்திட்டமானது நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கல்விப்பிரிவுகளையும் உள்ளடக்கி, தெரிவு செய்யப்பட்ட 320 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
முன்னோடித் திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் இத்திட்டம் 2024 ஆம் ஆண்டில் தேசிய திட்டமாக அமுல்படுத்தப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.