
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக அமையாமல் , அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்திருந்தது.