சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்…?

இந்த படத்தின் கதை 1970-களில் வடசென்னை பகுதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் அக்காலத்தில் காணப்பட்ட முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் ஆட்சிமுறை குறித்தும் ஆங்காங்கே இணைத்திருந்தனர்.

இதனால் இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாசர் பா.ரஞ்சித்தை பாராட்டி கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து, ‘நன்றி’ ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்துக்கு கொடுத்ததுக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.