வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
சிறுமியின் மரணத்துக்கு எதிரான கோஷங்களைக் கொண்ட பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு, மட்டக்களப்பு, தாண்டவன்வெளி சந்தியில் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வீட்டு வேலைத் தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும்”, “சிறுமிக்கு நீதி வேண்டும்”, “வீட்டு வேலையும் தொழில்தான்; சட்டம் வேண்டும்”, “நான் வேலைக்காரி இல்லை, தொழிலாளி” போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.