சீனாவின் சனத்தொகை வீழ்ச்சியானது எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக உள்ளது. அடுத்த 45 ஆண்டுகளில் நாட்டில் உள்ள மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையுமென்று அந்த புதிய ஆய்வு எச்சரிக்கின்றது.
இந்த கணிப்பு கடந்த வருடம் ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள் என்னும் பிறப்பு வீதத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது. இது முன்னைய மதிப்பீடுகளைவிட மிகவும் வியக்கத்தக்க சரிவு எனப்படுகிறது.
சீனாவின் தற்போதைய சனத்தொகை 1.4 பில்லியனுக்கும் அதிகமாகும்.
2065ஆம் ஆண்டுக்குள் சீனாவில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் இருப்பார்கள் என்று 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கணக்கிட்டிருந்தது.
மருத்துவ இதழான லான்செட்டில் (The Lancet) கடந்த வருடம் வொஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் வெளியிடபடப்பட்ட இன்னொரு கணிப்பீடு 2100 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் சனத்தொகை பாதியாகக் குரறயுமென்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் பேராசிரியர் ஜியாங் குவான்பாவோ மற்றும் ஜியாடொங்;; பல்கலைக்கழக சனத்தொகை மற்றும் வளர்ச்சி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய ஆய்வு நாட்டின் சனத் தொகை வீழ்ச்சி கடுமையாக இருக்குமென்று எச்சரித்துள்ளது.
சனத்தொகை வளர்ச்சியின் எதிர்மறை மந்தநிலை மற்றும் முன்னரே எதிர்நடவடிக்கைகளுடன் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்குவதில் சீன அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டுமென்று ஷியான் பல்கலைக்கழக வெளியீட்டில் ஜியாங் குறிப்பிட்டுள்ளார்.
சனத்தொகை கணக்கெடுப்பு கண்டுபிடிப்புகள் ஓரளவுக்கு மட்டுமே மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் சீன சனத்தொகையில் மாற்றங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வரையறுக்கப்பட்ட தகவல்கள் ஏற்கனவே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.