இந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஓர் அம்சமாக புதிதாக மேம்படுத்தப்பட்ட எல்-70 பாதுகாப்பு துப்பாக்கிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இதேவேளை அங்கு 155 எம்எம் போஃபர்ஸ் மற்றும் எம்-777 இலகுரக ஹொவிட்சர்கள் என்பவற்றின் பல்வேறு அலகுகளையும் பொருத்தியுள்ளது. யுத்த நடவடிக்கையின்போது பங்குதாரர்களாக செயல்பட்டு எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் மற்றும் தற்காப்பை வலுப்படுத்தும் வகையில் இவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியா அதன் பாதுகாப்பு நடவடிக்கையின் இன்னொரு அம்சமாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலைகளையும் (ஐடிஎல்ஏஸ்) கட்டுப்பாட்டுக் கோட்டுடன் (எல்ஏசி) ஒரு தொடர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு பல அடுக்கு தற்காப்பு முறையாகும். இதில் இராணுவத்தின் காலாட்படை, பீரங்கி, வான் பாதுகாப்பு மற்றும் கவச பிரிவுகள் என்பன உள்ளன. இவை இந்திய விமானப் படையின் பராமரிப்பில் செயல்படுகின்றன. இராணுவத்தின் தாக்குதல் திறன்களிலும் இவை கவனம் செலுத்துகின்றன.
பல சக்திமிகு நிலத்தடி பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டும் மற்றும் காலாட்படை வீரர்களின் துப்பாக்கிகள் மேம்படுத்தப்பட்டும் உள்ளன. எல்லா காலாட்படை துருப்புக்களும்
கட்டுப்பாட்டுக் கோட்டை முன்னோக்கிய பகுதிகளில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு சிக் சோவர்716 ரக துப்பாக்கிகள் முழுமையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
லடாக் பகுதியை நோக்கி இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய சீன துருப்புக்கள் நேருக்கு நேர் முகங்கொடுக்கும் பகுதி இதுவாகும். இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்குப் பிரிவில் இந்திய இராணுவம் பீரங்கி முதல் விமானப்பிரிவு வரை தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களில் அதிக கவனம் செலுத்துகிறது. சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள அதிக தொழில் நுட்ப ரீதியிலான வசதிகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.