இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தால் கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களை வீற்றோ செய்யும் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் மரிஸே பெய்னின் நகர்வை விமர்சித்த அவுஸ்திரேலியாவிலுள்ள சீனத் தூதரகம், இது அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மேலும் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா சம்மேளனமொன்று என இன்று தெரிவித்த பெய்ன், வெளிநாட்டு அரசாங்கங்களுடன் மாநிலங்கள் ஒப்பந்தங்களுக்குச் செல்வதற்கு தற்போது மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளர் சீனா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 எங்கிருந்து தோன்றியது தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை அவுஸ்திரேலியா கோரியது முதல் சீனாவுக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்ததுடன், இதையடுத்து வர்த்தக ரீதியிலான பதிலடியை சீனா வழங்கியிருந்தது.