பீஜிங்கின் தன்னம்பிக்கை இலக்கு, வளர்ந்துவரும் தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் என்பன ஐரோப்பிய நிறுவனங்களை மிகுந்த சிக்கலுக்குள்ளாக்கியுள்ளன என்றும் அது கூறியது.
நாட்டில் அவர்களின் செயல்பாட்டு விதிமுறைகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபை, சீனா 1978இல் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தம் மற்றும் இணக்கமான முறையை புத்துயிர் பெறச் செய்யவேண்டுமென்று அது தன் வருடாந்த நிலைத்தாளில் கேட்டுக்கொண்டுள்ளது.
வர்த்தக சபை தலைவர் ஜோர்ஜ் வுட்கே உலகமயமாக்கலுடன் இணைந்திருங்கள் என்று பீஜிங்கை வலியுறுத்தினார். தேசிய பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை இலக்கை அது பாதிக்காது என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தில் தன்னிறைவைப் பின்பற்றுவது என்பது ஒரு கணிக்கப்பட்ட ஆபத்து. அது பன்முகத்தன்மை இல்லாத நிலைமையை ஏற்படுத்தலாம் என்று வர்த்தக சபையின் அந்த வருடாந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான அரசியல் போக்கில் செயற்படும்போது வளர்ச்சி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவின் அரசியல் நோக்கங்களுக்கு இசைவாக நடந்துகொள்ளகின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதேவேளை சீனாவில் தொழில் புரியும் வெளிநாட்டு நிபுணர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையானது கண்டுபிடிப்பு சக்திமையம் அமைக்கும் சீனாவின் இலட்சியத்தைப் பாதிப்படையச் செய்யலாமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா 5ஜி மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி போன்ற உலகளாவிய தர தொழில்நுட்பங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.