இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித்(Zabihullah Mujahid) கூறியதாவது: ”சீனா எங்களின் மிக முக்கிய பங்காளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனா தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கவும் நவீனமயப்படுத்தவும்,உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லவும், முடியும்.
அத்துடன் சீனாவை ஆபிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘One Belt One Road‘ முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீனா காபூலில் தனது தூதரகத்தை திறந்து வைத்திருக்க உறுதி அளித்துள்ளதாகவும் ,ஆப்கானுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் புதிய தலிபான் அரசு தீவிரவாத குழுக்கள் உடனான உறவைக் கைவிட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.