சீனாவுடன் தாய்வானைச் சேர்ப்பது தவிர்க்க முடியாதது என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்வானிலிருந்து ஸி ஜின்பிங்கின் கருத்துகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சீனாவில் காணப்படாத ஜனநாயக சுதந்திரங்களை விட்டுக்கொடுக்க தாய்வான் மக்கள் எப்போதும் தயாரில்லை என தாய்வான் ஜனாதிபதி சை இங்-வென் கூறியுள்ளார்.தாய்வானும் சீனாவும் 1949ஆம் ஆண்டு சிவில் யுத்தத்தின் பின்னர் தனித்தனியாகவே ஆழப்படுகின்றபோதும் மீண்டும் சேர்க்கப்படவேண்டிய தனது பிராந்தியமாகவே தாய்வானை இன்னும் சீனா நோக்குகிறது.
தாய்வானை சீனாவுடன் மீள இணைக்குமாறு கோருகின்றதும் இராணுவ முரண்பாட்டை நிறுத்துமாறும் தாய்வானுக்கு 1979ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தகவலின் 40ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து உரையாற்றும் உரையொன்றிலேயே சீனா கட்டாயமாக ஒன்றிணைக்கப்படுமென்றும் புதிய தலைமுறையில் இருக்கும் சீன மக்களின் சிறந்த புத்துயிர்ப்புக்கு இது தவிர்க்க முடியாததென ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாய்வானை சீனாவுடன் இணைப்பதில் தலையிடும் தாய்வானிய பிரிவினைவாத செயற்பாடுகளுக்கும் வெளிப்படைகளுக்குமெதிராக இராணுவப் பலத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்தும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்காமல் விடுவது குறித்தும் தாங்கள் எந்தவித உறுதிமொழியையும் வழங்கவில்லையென ஸி ஜின்பிங் மேலும் கூறியுள்ளார்.
தமது சொந்த நாணயம், அரசியல், நீதி அமைப்புகளுடன் இறையாண்மையுள்ள நாடொன்றாக தம்மை தாய்வான் கருதுகின்றபோதும் சீனாவிலிருந்து உத்தியோகபூர்வமாக எப்போதும் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.