இந்த அறிவிப்பு மூலம் இப்பகுதியில் இருக்கும் 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் இப்பகுதியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் வருமானம் இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மக்கள் முக்கியமான காரணத்திற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், இல்லையெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் Xi’an பகுதியிலும், பெரு நகரங்களில் இருந்து Xi’an பகுதிக்குமான போக்குவரத்து அனைத்தையும் சீன அரசு தடை செய்துள்ளது.
மேலும் ஒரு வீட்டுக்கு ஒருவர் அடிப்படையில் 2 நாட்களுக்கு ஒருமுறை வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Xi’an பகுதியில் 24 மணிநேரத்தில் சுமார் 52 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகச் சீன அரசு புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.