மாறாக, ஸ்திரத்தன்மை மற்றும் அனர்த்த கட்டுப்பாட்டை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங்கில் உள்ள மக்கள் மகா மண்டபத்தில் தேசிய மக்கள் காங்கிரஸின் ஆரம்பத்தில் வருடாந்த அரசாங்க பணி அறிக்கையை வழங்கப்பட்டது.
எங்களுக்கு முன்னால் உள்ள பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம் என்று கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகளிடம் பிரதமர் தெரிவித்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் பொருளாதார மீட்சி இன்னும் நடுங்கும் நிலையில் இருப்பதாகவும், பொருட்களின் விலைகள் அதிகமாகவும், ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனாவின் வெளிச் சூழல் அதிகமாக நிலையற்றதாகவும், மோசமானதாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளது என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டு, தேசிய காங்கிரஸுக்கு முன்னதாக, ஆளும் கட்சி அதன் தலைமைப் வரிசையை மாற்றியமைக்க முனையும் போது, பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.