இதேவேளை, காலி முகத்திடலுக்கு எதிராக, கோல் பேஸ் கிரினில் கடமையாற்றும் உள்ளூர் தொழிலாளர்களில் 50 பேர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் சுமார் 200 பேர், இரத்மலானையில் தங்கியிருக்கின்றனர். அந்த இடமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த 14 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50 பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே, தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி தொற்றாளர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.