ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
கொரோனா காலத்தில் சீனாவின் உதவிகளுக்காக ஜனாதிபதி இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரக்கிடைத்தமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீன வௌிவிவகார அமைச்சர் நெருக்கமான நண்பன் என்றவகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச்செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.