இந்நிலையில், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, குறித்தப் பிரிவின் கீழ் வசிக்கும், 946 குடும்பங்களைச் சேர்ந்த 2,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், வென்னப்புவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வசிக்கும், 368 குடும்பங்களைச் சேர்ந்த 1,313 பேரும், நாத்தன்டியா பிரதேச செயலகப் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 856 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், முந்தல், மஹவெவ, கருவலகஸ்வெவ. தங்கொட்டுவ, மஹகும்புக்கடவல, ஆனமடுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களும், சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 50 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைப்பதற்காக, வனாத்தவில்லு, வென்னப்புவ, நாத்தன்டிய ஆகிய பிரதேச செயலகங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் இதுவரை, 58 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.