அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா சீவல் தொழிலாளர்களது உழைப்பினையும் ஒட்டுமொத்தமாக சுரண்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் கலந்து கொண்ட பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் க.நடராசா அதனை அம்பலப்படுத்தியுள்ளார். பனை அபிவிருத்தி சபை நிதியிலிருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுமார் ஆறுமில்லியன் வரையினில் அப்பட்டமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது பனை அபிவிருத்தி சபை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையினில் கடந்த கால முறைகேடுகளை ஆராய குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வின் போதே சுமார்; ஆறுமில்லியன் வரையினில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணமாக தொழிலாளர்களது இரண்டாயிரம் பிள்ளைகளிற்கு துவிச்சக்கரவண்டிவழங்குவதாக கூறி வெறும் 200 துவிச்சக்கர வண்டிகளே வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக திக்கம் வடிசாலையினில் ஏழை தொழிலாளர்களின் வீடமைப்பிற்கு ஒதுக்கி வைக்கப்பட்ட பலகோடி பணத்தையும் டக்ளஸ் முதல் முன்னாள் அமைச்சரான மகேஸ்வரன் வரை சுருட்டி அவர்களை நடுத்தெருவினில் விட்டுவிட்டதாகவும் நடராசா குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக ஆயுத குழுக்கள் பலவும் முறையற்ற விதத்தினில் திக்கம் வடிசாலை வருவாயை சுரண்டி சென்றிருந்ததாகவும் க.நடராசா குற்றஞ்சாட்டியிருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ்.மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையின் சகோதரரான நடராசா அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு தான் வெளியேற வந்திருந்ததாக தெரிவித்தார்.
நடராசா முன்னாள் தீவிர புலிகளின் எதிர்பாளராக தன்னை அடையாளப்படுத்தி 1980 களில் இருந்து 1990 வரை செயற்பட்டவர். இதன் பின்பு அவுஸ்திரேலியாவிற்கு இடம் பெயர்ந்து பின்பு புலிகளின் பேச்சாளர் என்ற வகையில் தீவிர புலி ஆதரவாளராக செய்யபட்டவர்…… செயற்படுபவர். தற்போது மகிந்தாவின் புண்ணியத்தால் புலிகள் அழிக்கப்பட மீண்டும் இலங்கையிற்கு விசிட் அடித்து புலிகள் ஆதரவாளராக தன்னை இனம் காட்டி டக்ளஸ் இற்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது