அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில், 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயற்பட்டு வருகிறது. இதில், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.