சுரங்கத்துக்குள் வெள்ளம்:15 தொழிலாளர்கள் சிக்குண்டுள்ளனர்

அவர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது, சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஒரு சிலர் சுரங்கத்தில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.  தப்பி வந்த தொழிலாளர்கள், சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் பொலிஸாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்பு பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். 

இராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது எனவும், அவர் கூறியுள்ளார்.

இந்த சுரங்கம்  நகரில் இருந்து தொலைவில், உட்பகுதியில் அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சட்டவிரோத வகையில் சுரங்கம் செயற்பட்டு வந்துள்ளது என, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Leave a Reply