சுதந்திரக்கட்சிலிருந்து தான் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் விரும்பமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக அரசியல் நோக்கில் கைதுகள் இடம்பெறவதாகவும் அவர் தெரிவித்தார். தலதா மாளிகையில் நேற்று காலை(28) வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார் .
அவர் மேலும் கூறியதாவது,
எனது பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்தவரின் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் `சொபின்’ பையொன்றைத்தான் அவர்களால் மீட்க முடிந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலமாக்கியவன் நான்தான். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்த பெருமையும் என்னையே சாரும். எனவே சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை. புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் விரும்பமாக இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டுள்ளது. வெளிநாட்டு ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன. இந்நிலையில் நாட்டு மக்களை திசைதிருப்புவதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன.
அந்தவகையில் கோட்டா, பஸில், நாமல், போன்றவர்கள் மற்றும் தன்னையும் விரைவில் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி கூறினார்.