இதனால் குடிநீர் வசதியின்மை, வாழ்வாதார வசதியின்மை மற்றும் வறுமை காரணமாக பல்வேறு நெருக்கடிகளை குறித்த பிரதேச மக்கள் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு, மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மலையகத் தமிழ் மக்களே மாயவனூர் பகுதியில் அதிகம் வசிக்கின்றனர்.
அடிப்படை வாழ்வாதார வசதிகள் எதுவும் அற்ற நிலையிலும் தற்போதைய வரட்சி காரணமாக குறித்த பகுதியில் கிணறுகளில் கூடத் தண்ணீரில்லாத நிலை காணப்படுகின்றது.
2014ஆம் – 2015ஆம் ஆண்டுகளில் வடக்கு மாகாண சபையால் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 320 இலட்சம் ரூபாய் செலவில் உப உணவு பயிர்ச்செய்கையை நோக்கமாக கொண்டு, மாயவனூர் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனமே தற்போது எவ்வித பயன்பாடும் இன்றிக் காணப்படுகிறது.
இவ்வாறு பெருந்தொகையான நிதியைச் செலவிட்டும் குறித்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படவில்லை.