ஜனநாயகத்துக்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய

மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கு மரண அடி என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை, அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்தவும் முடியாது, தாமதிக்கவும் முடியாது. 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் நடத்தப்பட வேண்டும்.” என்றார்.