இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாரெனில் அரசியலமைப்பிற்கமைய அவரால் பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்க முடியாதென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நேரிடும் போது, அதனை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிராக தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டக்கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த விடயத்தில் தலையீடு செய்வதை தான் தவிர்த்து கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.