’ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை’

நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் கோபம்? மே 9 ஆம் திகதி அமைதியின்மை மற்றும் வன்முறைக்கு வழிவகுத்ததாக தெரிவித்த அவர், தீர்வுகளைக் காணும் வரை இந்த நிலைமை குறையாது என்றும் தெரிவித்தார்.
 
எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரதமரும் எரிசக்தி அமைச்சரும் முன்வைத்துள்ள கருத்துக்கள் முரண்பாடானவை என்றும் குறிப்பிட்டார்.
 
சபையில் உரையாற்றிய அமைச்சர், இன்று (நேற்று) முதல் எரிபொருள் விநியோகம் வழமை போல இடம்பெறும் என தெரிவித்திருந்த நிலையில், எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமாக இருக்கும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

புகழ்பெற்ற அரசியல்வாதிக்கும் அனுபவம் இல்லாத அமைச்சருக்கும் உள்ள தெளிவான வித்தியாசம் இதுதான் என்றும் ராஜித எம்.பி சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வாறான அறிக்கைகளின் துல்லியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.