
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.