ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து விளக்கம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க உடனடியாகத் தலையீடு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக, அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

இதேவேளை, மஹவ-ஓமந்தைக்கு இடையிலான தண்டவாளத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா வழங்கிய கடன் உதவியை மானியமாக பரிசீலிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.