2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அமைச்சு மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை ஒட்டி விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவினத் தலைப்புகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, டி.பி. விக்கிரமசிங்க, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.