குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவோருக்கான தேர்தலில் 15 மாகாணங்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே, குடியரசு கட்சி சார்பில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், போட்டியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மக்களின் குரல் கேட்கப்படவேண்டும் என நான் விரும்பினேன். அதை எப்போதும் செய்வேன். போட்டியிலிருந்து விலகினாலும் மக்களுக்காக எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று கூறியுள்ளார்.