சுயேட்சை வேட்பாளர்கள் குறித்து தவறாக எதுவும் கூற முடியாது என கோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறினார்.
”ஜனாதிபதி ரணில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்”.
“எவ்வாறாயினும், எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், பல சுயேட்சை வேட்பாளர்கள் உண்மையில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு பினாமிகளாக செயல்படுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் நேரடி தொடர்பு கொண்ட மூன்று அல்லது நான்கு முன்னாள் எம்.பி.க்கள் ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்க வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
நான் வெளிப்படையாக இருக்கிறேன். பினாமி வேட்பாளர்களின் பிரச்சினை தொடர்பான எந்தவொரு சவாலையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
“தங்கள் சுயேச்சையான வேட்புமனுவை மாற்ற விரும்பினால், அவர்கள் வேட்புமனுவைச் சமர்ப்பிக்கும் முன் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட அவர்கள் குறைந்தபட்சம் 50,000 சத்தியக்கடதாசிகளை நேரிலோ அல்லது நிகழ்நிலை முறையிலோ சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான செலவுடன் ஒப்பிடுகையில் ரூ. 5 மில்லியன் அபராதம் விதிக்கப்படுவது பயனற்றது” என்று தேசப்பிரிய கூறினார்