2009 பிந்திய நாட்களில் பிரமாண்டமான அளவில் கட்டுமான நிர்மாணப்பணிகள் நடைபெற்றன.
வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல நாடு முழுவதும் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிவேக நெடுஞ்சாலைகள். வீதிகள் ,ரயில்பாதைகள் பாலங்கள் குளங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள்
வீடுகள் முழுவீச்சில் நிர்மாணிக்கப்பட்டன.
தெற்கு வடக்கு ரயில்பாதை கேரதீவு சங்குப்பிட்டி நெடுஞ்சாலை மூதூர் திருமலை நெடுஞ்சாலை
கிளிநொச்சி அறிவியல் நகர் பொறியியல் பீடம் யாழ் வைத்திய சாலை நவீனமயம் .
அழிந்து போன மின்சார கட்டுமானத்தை முழுவீச்சில் புதுப்பித்தது
தொலைதொடர்பு வசதிகளை ஏறபடுத்தியது
தெற்கு வடக்கு உறவு மூடுண்ட வடபகுதியை நவீன உலகத்தினுள் பிரவேசிக்க செய்தது
கரடுமுரடான வன்னி தீவுப்பகுதி போக்குவரத்தை வாழ்வை இலகு படுத்தியது.
உல்லாசப்பயணத்துறை உல்லாசப்பயணிகள் வருகைக்கான ஏதுநிலைகளை ஏற்படுத்தியது.
விவசாய நில பயன்பாடு அதிகரிப்பு உரமானியம் மீன்பிடிதடைகள் நீக்கப்பட்டு வழமையான நிலை தோற்றுவிக்கப்பட்டது
2005 இற்கு பின்னர்; அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல், 13 ஆவதற்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கான முயற்சிகள் இந்த முயற்சிகள் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கிறோம்.
நூற்றுக்கு மேற்பட்ட கலந்துரையாடல்கள் 2009 இல் இருந்து இன்று வரை மக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான ஜனநாயக இடைவெளி அதிகரித்து வந்திருக்கிறது.
அந்த இடைவெளி மேலும் வியாபிப்பதோடு உறுதி செய்யப்பட வேண்டும்
விடுவிக்க வேண்டிய மக்களின் நிலங்களை மேலும் விடுவித்தல் –
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வருடக்கணக்கில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை .
மற்றும் 2015 இல் இருந்து இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ள சமூகபொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்.
விவசாய நிலங்கள் முழுபயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்
எங்கும் பசுமை எதிலும் பசுமை என்றொரு பேரியக்கம் தெடங்கப்பட வேண்டும்.
பேண்தகவு முறையில் சமூக பொருளாதார சுற்றாடல் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வடக்கிலிருந்து தெற்கு வரை பருத்திதுறையில் இருந்து கதிர்காமம் வரை கரையோர ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலை நிறுவப்பட வேண்டும். இது இலங்கையின் கிழக்கிலும் சமாந்தரமாக மேற்கிலும் நிகழவேண்டும். கடலும் கடல் சார் தொழில் புரிபவர்களின் வாழ்வு எழுச்சி பெற உல்லாசப்பயணத்துறை விருத்தியாக இது அவசியமானது.
இந்த நாட்டின் வடக்கிலுள்ள பாரம்பரிய துறைமுகங்களான மன்னார், காங்கேசன்துறை துறைமுகங்கள் சர்வதேச வர்த்தக வாணிப உறவுகளுக்கு ஏற்புடையதாக திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
வடக்கு சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டது முக்கியமான நிகழ்வு இவற்றுடன் இணந்ததாக தொடர்பு பட்டதாக இந்த விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறிய மீன்பிடி துறைமுகங்களும் வினைத்திறனுடையவையாக மாற்றப்பட வேண்டும்.
சுற்றாடலின் அபாயகரமானதும் வெப்பமானதும் வரண்டதுமான நிலையில் இருந்து தூய்மையானதும் பசுமையானதுமானமான நிலைக்கு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.
நிர்மாணப்பணிகளுக்காக இயற்கை வளங்களான மணல் மரம் என்பன சூறையாடப்படும் நிலை தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதோடு மாற்றுவழிகள் கண்டறியப்படவேண்டும்.
வறுமை ஒழிப்பு வேலைவாய்ப்புக்களை பாரிய அளவில் உருவாக்குவது
பிரதான வீதிகளுக்கப்பால் உள்ளக வீதி அபிவிருத்தி
இலவச கல்வி இலவச வைத்தியம் என்ற இலங்கையின் சிறப்புவாய்ந்த சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை மீள் உறுதி செய்வது .
தொழில் ஒன்றை செய்வதற்கான முறையில் கல்வித்துறையில் சீர்திருத்தம் .
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான ஏற்பாடுகள்.
சாதாரண மக்களிடையேயான தொடர்பாடலை சமூக பொருளாதார கலாச்சார உறவுகளை ஊக்குவித்தல் பெறுமதி வாய்ந்த இலங்கையின் பல்லின பாங்கை பாதுகாத்தல் என்பன நாம் எதிர்பார்க்கும் விடயங்கள்.
உலகளாவிய சுற்றாடல் நெருக்கடிகளை எடுத்துக் கொண்டால் எமது நாடு இன்றளவில் ஆசீர்வதிக்கப்பட்ட நாடாகவே இருக்கிறது.
எமது நீர், நில, கடல் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தெற்காசியாவின் புகழ்மிக்க எம் நாட்டின் பல்லுயிரியல் பாங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சோசலிச கூட்டணியின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ பாதுகாப்பார், முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
வரலாறு பின்னோக்கி இயங்குவதில்லை .இருண்ட காலம் முடிவடைந்து விட்டது. அந்தகாலத்திற்கு நாம் திரும்பி செல்ல முடியாது. இனங்கள் சமத்துமாக ஒன்றிணைந்து வாழுழ் ஒளிரும் பிரகாசமான பாதை ஒன்றில் காலடி வைப்போம்.