அதுதான் ஜுன் 19 தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் தோழர் பத்மநாபாவின் கொலையில் நடைபெற்றது.
ஈழவிடுதலைப் போராட்டம் முழுவதும் ஏன் இது உலகின் எந்த அரசியல் செயற்பாடு விடுதலைப் போலராட்டம் எல்லாவற்றிலும் இந்த இடதுசாரி போக்கு வலதுசாரிப் போக்கு என்பது இருந்து கொண்டுதான் இருந்திருக்கின்றது.
மகாத்மா காந்தியின் கொலை கூட இதற்கு விதிவிலகல்ல அவரை கொலை செய்த கோட்டே இன்றை வலதுசாரி சங்க பரிவாரங்களின் ஆதர்ச புருஷர் என்றால் உங்களால் விளங்கிக் கொள்ள முடீயும்
பல இயக்கங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்ற போது பல விமர்சனங்களுக்கு அப்பால் இந்த இடதுசாரிச் செயலபாடு வலதுசாரிச் செயற்பாடு என் ஒரு ஓட்டம் இதற்குள் இருந்து கொண்டுதான் இருந்தது.
இதில் 1986 இறுதியில் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் ஐ தடை செய்யும் வரை இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் அல்லது அதற்கான கருத்தியல் ஆதிகம் வலதுசாரி செயற்பாட்டாளர்களுக்கு சம பலத்தில் இருந்து.
இது முதலாளித்துவ மேற்குல சகத்திகளுக்கு ஏற்புடைய விடயம் அல்ல இந்த இடதுசாரி வளர்ச்சிப் போக்கு முளையில் கிள்ளி எறியும் செயற்பாட்டிற்கு அவர்களின் வலதுசாரிக் கருத்தியலை தம்முள் அதிகம் கொண்டிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை கையாண்டார்கள். வரலாற்றுச் செயற்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்தால் இதனை அறிய முடியும்.
அதற்கான செயல்வடிவத்தை கொடுக்கவே ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புகள் யாவற்றையும் புலிகள் அழித்தொழித்த ஏகபோக செயற்பாடு ஆகும் இதில் கடைசி இலக்காக அமைந்தவர்கள் ஈபிஆர்எல்எவ் இனர்.
இந்த அனைத்து இயக்கங்களையும் தடை செய்து ஆழத்தில் இருந்து அப்பறப்படுத்திய சிறிது காலத்திலேயே உணவுப் பொதிகளை வடமராட்சியிற்குள் போட்டு புலிகளையும் மக்களையும் காப்பாற்றும் இந்திய அரசின் செய்பாடும் அதனைத் தொடர்ந்த ஒப்பந்தங்களும் ஏற்பட்டுவிட்டன.
அதிகாரப் பரவலாக்கம் என்ற மகாணசபை முறைமையும் இதனை ஏற்படுத்துவதில் செல்வாக்கு செலுத்திய இந்தியாவும் அதனைத் தொடர்ந்த ஆயுத ஒப்படைப்பு மகாணசபையை அமைத்தல் என்று வந்த போது மீண்டும் ஈழத்தில் பல்வேறு அமைப்புகளும் தமது கருத்தியலின் அடிப்படையில் அரசிலை செய்ய மக்களைச் சந்திப்பதற்கு பன்முகத் தன்மையுள்ள அரசியல் தலமைகளை ஏற்படுத்துவதற்கான ஒரு ஜனநாயக இடைவெளி எற்பட்டது.
புலிகளின் ஏகபோகம் கலைவதை அவர்களால் புலிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதுதான் இந்திய இராணுவத்தை பூரண கும்பத்துடன் அழைத்து வந்த புலிகளே அவ்ர்களுக்கு எதிரான சண்டையை ஆரம்பிப்பதற்கான உண்மையான காரணி ஆகும். ஆனால் முன்னரங்களில் பல்வேறு வியாக்கியானம் அவர்களால் கொடுக்கப்பட்டாலும் இதுதான் உண்மையான காரணம்
அமைந்த இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபையிலும் பத்மநாபா தனது பன்முகத் தன்மையை அது இனங்களுக்கு இடையில் தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட்ட பல்வேறு இயக்கங்கள் மத்தியிலும் ஏன் பிரதேச அடிப்படையிலும் செயற்படுத்தினார் என்பதை அவரால் அமைக்கப்பட்ம அமைச்சர காட்டி நின்றது.
மகாணசபை உறுப்பினர்கள் பல்வேறு சமூகப் பிரிவுகளின் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படுமாறும் பார்த்துக் கொண்டார்.
இந்த பன்முகத் தன்மை என்பது சமூக நீதி ஜனநாயகம் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற இடதுசாரி செயற்பாட்டின் அங்கமாக இருந்ததை உணர்ந்த முதலாளித்துவ எசமானங்களும் அவர்களின் இலங்கை ஏவல்களான பிரேமதாசாவும் அவர்களுக்காக சேவகம் செய்காத்திருந்த புலிகளும் தெரியும் இன்னும் சில தமிழ் சிங்களத் தரப்புகளும் புரிந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சிதான் மகாணசபை செயற்பட முடியாத சூழலை இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் ஏற்பட்டு பத்மநாபாவும் அவர்களின் ஏனைய தோழர்களும் உயர ;வாழ்வதற்காக பாதுகாப்பிற்காக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தமையிற்கான காரணம்.
ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர்களின் இந்த இடதுசாரிக் கருத்தியலுடனான தொடர்புகளும் செயற்;பாடுகளும் தொடர்ந்தன தொடருகின்றன என்பது உணரப்பட்டதினால் இதனை அழித்தொழிப்பதற்கு செயல் வடிவம் கொடுத்தவரகளாக புலிகள் 1990 ஜுன் மாதம் 19 ம் திகதி சூளைமேட்டில் பத்மநாபாவையும் அவரின் தோழர்கள் பெண்கள் உட்பட 13 பேரை கொலை செய்தனர்
இந்தக் கொலையுடன் இந்த இடதுசாரி செயற்பாட்டின் வீச்சு வேகம் குறைந்தது என்பதே உண்மை.
பரந்துபட்ட தொடர்பும் அதற்கான சந்திப்புகளும் நல்லெண்களும் என்றவாறு ஈழத்திலும் தமிழகத்திலும் சர்வதேசத்திலும் செயற்படுவதற்கான தலமையை வழங்கிய பத்மநாபாவின் மரணம் பாரிய பின்னடைவுகளை ஈழ அரசியலில் ஏற்படுத்தி விட்டது.
அது இன்று வரை பல்வேறு பெயர்களில் இணக்க அரசியல் எதிர்ப்பு அரசியல் பாராளுமன்ற அரசியல் தேசியம் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று மத்தியில் ஆட்சியில் வரும் யாவருடனும் சந்தர்பவாத அரசியல் என்று எங்கும் தொடரந்து வியாபித்திருக்க காரணமாகவும் அமைந்துவிட்டது.
இப்போது ஜுன் 19 தியாகிகள் தினத்தை நினைவுகூரும் யாவரும் செய்ய வேண்டியது தமிழ் பேசும் அரசியல் பரப்பில் வலுவிழந்து இருக்கு இடதுசாரி அரசியலை கருத்தியலை 70 வயதுகளை அண்மிக்கும் முன்னைநாள் ஈபிஆர்எல்எவ் ஏனைய விடுதலை அமைப்புத் தோழர்களில் சிலருக்கு அப்பால் பொது மக்களிடம் சமூகநீதி, அனைவரையும் இணைத்த அரசியல், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல், பெண் அடிமைத்தனத்திற்கு எதிரன செயற்பாடுகள் இனங்களுக்கிடையே சகோதரத்தும் ஜனநாயம் பிற்படுதப்பட்டோர் நலம் என்றாக அரசிலை அரசியல் இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும்.
இதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒரு இடதுசாரிக கருத்தியல் அரசியல் வலதுசாரி அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு குறும் தேசிய வாதம் பேரிவாதத்திற்கு எதிரான செயற்பாடு கருத்தியலை உருவாக்கப்பட வேண்டும்.
இதனைச் விடாப்பிடியாக செயற்படுத்துவதே ஜுன் 19 இற்கான உண்மையான நினைவுச் செயற்பாடாகவும் தோழர் பத்மநாபாவின் சிந்தனையை அவரின் மரணத்தின் பின்பு தொடர்வதாக அமைய முடியும்.
முதலாளித்த அமைப்பில் தேர்தல்களும் இதற்குள் அணி சேருவதும் தவிர்க்கப்படுவதும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து நல்லவற்றை செய்வது என்றாக நடைபெறட்டும் ஒரு புறத்து.
ஆனால் அனைத்த மக்களுக்குமான அரசியலை வாழ்விலை உறுப்பிடுத்தும் சமூகநீதியிற்கான இடதுசாரி அரசியலை கருத்திலை உருவாக்கும் போராட்டத்தில் பத்மநாபா கருத்தில் தோழர்கள் ஈடுபட வேண்டும் என்பதே இங்கு முக்கியமாகின்றது.
அவர்கள் தற்போது குறும் தேசியவாதம், சந்தப்பவாத இணக்க அரசியல் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் வேறு பிரிவினாராக செயற்பட்டாலும் இவர்கள் யாவரும் பத்மநாபா மீது உண்மையான மதிப்பும் அபிமானமும் வைத்திருப்பார்கள் ஆகின் மக்கள் மத்தியில் மேற்கூறிய கருத்தியலை உருவாக்க அமைப்புகளைத் தாண்டி கருத்தியல் ரீதியாக ஒருமைப்பாட்டுன் செயற்பட்டாக வேண்டும்.
இதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் தமிழ் நாட்டில் பெரியார் இந்தியாவில் அம்பேத்கார் விதைத்த கருத்துகள் இன்று இடதுசாரி வலதுசாரி(இதற்கு எதிராக மனிநலையில் இரந்தாலும) என்று யாவரும்; இதனை மறுத்து அரிசியல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் கருத்தியல் போன்ற பலத்தை ஈழத்திலும் எற்படுத்தியாக வேண்டும்.
இதுதான் பத்மநாபாவிற்கு அவர் கொண்டிருந்த மக்கள் நலக் கருத்தியலுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
எம்மில் சில நல்லகண்ணுகளும் உண்டு இருக்கட்டும் அவர்கள் நல்வர்கள் சரியானவர்கள் ஆனால் அதுமட்டும் போதாது.
விடாப்பிடியாக வலதுசாரிகளுக்கு சவால்விட்டுச் செயற்படும் கேரளத்து இடதுசாரித் தலைவர் பிரணாய் விஜயன்கள் உருவாக வேண்டும்.
இதற்கு உண்மையான ஜனநாயக சக்திகளுடனான புரிந்துணவும் இணைந்து வேலை செய்வதாகவும் அமைய வேண்டும்.
இந்திய இராணுவத்தை எதிர்தார்கள் சிங்களப் பேரினவாத்திற்கு எதிராக போராடினார்கள் என்பதை முன்னிறுத்தி போராடப் புறப்பட்ட இடதுசாரிகளை ஏனைய தேசவிடுதலை போராளிகளை கொன்று குவித்து எகபோகமானானர்கள் புலிகள். இதனை மறந்து மறுத்து பேசும் அளவிற்கும் ஈழவிடுதலை என்பது புலிகளால் மட்டும் நடாத்தப்பட்ட போராட்டம் என்று கட்டமைக்க முற்படும் பலருமாகவே தமிழ்நாடு இன்று நிரம்பி வழிகின்றது. இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
இதில் பல பெரியாரிஸ்ட்களும் திராவிட அமைப்புக்களும் இடசாரிகளும் திருமாவளவன் போன்ற சமூகநீதி கதைப்பவர்களும் அடங்குகின்றனர்.
இவர்களுக்கு உண்மையான நிலைமை தெரிந்து இருந்தாலும் இன்று மீண்டும் எமது போராட்டத்தில் நிகழ்ந்தவை தெளியப்படுத்தப்பட வேண்டும்.
இதற்கான முன்னெடுப்புகளை தியாகிகள் தினத்தில் பத்மநாபாவின் சிந்தனையாளர்கள் செய்தாக வேண்டும். தமிழ் பேசும் மக்கள் மத்தியல் கோலோச்சும் வலதுசாரி அரசியலுக்கு மாற்றான மக்களுக்கான அரசியல் என்று ஒன்று உள்ளது. அது இடதுசாரி அரசியல் என்பதுவும் அதுதான் சமூக நீதி பன்முகத் தன்மை அனைவருக்குமான வளர்ச்சி அனைவரையும் ஒன்றாக பார்க்கும் சாதிய முறையை தகர்க்கு முறமை என்று சமானிய மக்கள் உணரும் வகையிலான அரசியல் செய்தாக வேண்டும் இதனை இந்த தியாகிகள் தினத்தில் வலிமையாக முன்னெடுப்போம்.
இதற்கான சில அடித்தளங்களை அனைவரையும் இணைத்த விளையாட்டுப் போட்டி, சில முற்போக்க தலைப்பிலான கட்டுரைப் போட்டி என்று கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சாதிய ஒடுக்குமுறை சமூக வேறுபாடு அதிகம் கையாளும் பாகுபடுத்திப் பார்க்கும் சமூக அமைப்பை அதிகம் கொண்ட வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஏன் இதனைச் சாத்தியமாக்கக் கூடாது இதற்கான எல்லாவகையான தட்ப வெப்ப நிலையும் வடக்கிலும் யாழ்ப்பாணத்திலும் நிறையவே உண்டு.
எனவே இடதுசாரித் தோழர்களே மக்களிடம் செல்லுங்கள் மக்களுக்கான அரசியல் இது இடதுசாரிக் கருத்தியலாகத்தான் இருக்க முடியும் என்பதை சமூ நீதியன் அடிப்படையில் ஜனநாயகத்தின் உண்மைத் தன்மையின் வெளிப்பாடாக அனைவருக்கும் சமனான வளர்ச்சி என்றாக ஆரம்பியுங்கள் தோழர் நாபாவின் சிந்தனையை மக்கள் மயப்படுத்துங்கள்.
அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயற்படுத்திக் காட்டிய அதிகாரப்பரவலாக்கத்தின் ஒரு அங்கமான மாகாணசபை முறையை செயலூக்கமானதாக்குங்கள்.