அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வருகிறது. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயக்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவரது கைது எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தலில், திமுகவின் அராஜகத்தை, ஜனநாயகப் படுகொலையை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டிக்கிறோம் என ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.ஜெயக்குமாரை மார்ச் 7-ம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரி 23ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.