ஒரே ஒரு உருப்படியான அமைச்சர் விஜய பாஸ்கர், சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து போராடியபோது, கடைசிவரை அங்கேயே இருந்து முழுவீச்சில் பணிகளை நடத்தி இருக்கமாட்டார்.
தனக்கு எதிரான கொள்கை கொண்ட தலைவராயினும் அவர்களை யாரும் இழிவுபடுத்துவதை விரும்பியிருக்கமாட்டார். திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களை ஆம்பிளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வா என்று இழிவாக, மரியாதை குறைவாக காயத்ரி ரகுராம் பேசியிருக்க மாட்டார். அப்படி பேசியிருந்தால் அவர் வாயில் பஞ்சர் போட்டு விட்டிருப்பார்.
துக்ளக் அறிவாளி பெரியாரை பற்றி அனாவசியமாக பேசியிருக்கமாட்டார்.
கஸ்தூரி, காயத்ரி ரகுராம், S.V. சேகர் போன்ற பப்லிசிட்டி பைத்தியங்கள் எங்கே இருந்திருப்பார்கள் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
மாநில உரிமையை எந்நேரத்திலும் யாரிடமும் விட்டுக்கொடுத்திருக்கமாட்டார். OPS, EPS மாதிரி டெல்லி வரை எந்த ஒரு விஷயத்திற்கும் சென்றிக்க மாட்டார். மாறாக மோடியே போயஸ் கார்டன் நோக்கி பலமுறை வந்திருப்பார்.
மே-2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலோ அல்லது கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலோ BJP உடன் கூட்டணி அமைத்திருக்கமாட்டார். BJP கடைசி வரை அரசியல் அனாதையாகவே இருந்திருக்கும்.(இப்போதும் அப்படித்தான்)
கொரோனா தடுப்பு நிவாரணமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகையின் நாயகன் அமைச்சர் செல்லூர் ராஜு, ``ரேஷன் கடை பணியாளர்களுக்கு நாப்கின், சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க. கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ எனச் சொல்லி அதிர வைத்தார். மாஸ்க்கை நாப்கின் என மாற்றிச் சொன்ன செல்லூர் ராஜு, ஜெயலலிதா அமைச்சரவையில் ``ஒரு பெண் நாப்கின் இல்லாம இருந்தாங்க...'' என செல்லூர் சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்திருக்க முடியுமா? அப்படி நகரும் போதே அந்த அமைச்சர் முன்னாள் ஆயிருப்பார்.
(இவரின் முந்தைய தெர்மாக்கோல் புரொஜெக்ட்டை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கிவைக்க சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அப்போது, தூரத்தில் நின்றிருந்த பழங்குடியின மாணவர் ஒருவரை “டேய் தம்பி, வாடா, இங்க வாடா” என்று அழைத்து தனது செருப்பை கழற்றிவிடுமாறு கூறினார். அந்த சிறுவனும் ஏதும் அறியாது அமைச்சரின் செருப்பை கழற்றி விட்டு சென்றார்.
அம்மா இருந்திருந்தால் இதற்கு பதிலாக அந்த அமைச்சர் அம்மா, உங்கள் காலணிகளை ஷுபாலிசால் பாலிஷ் போடவா அல்லது எனது நாக்கால் பாலிஷ் செய்யவா என்று கேட்டிருப்பார்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அவருக்கு வயது 70-க்கு மேலாகிவிட்டது. செடி, கொடிகள் அவருடைய காலில் சிக்கிக்கொண்டன. வயது முதிர்வின் காரணமாக அவரால் குனிய முடியவில்லை. அதனால், சிறுவனை அழைத்து அதனை அகற்றச் சொல்லியிருக்கிறார். அதில் உள்நோக்கம் எதுதும் கிடையாது. அதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இந்த ‘முட்டுகுடு’ அமைச்சர் ஜெயக்குமார், அவரின் திருஉருவத்தையும், பொய் பித்தலாட்டங்களையும் தினமும் தொலைக்காட்சியில் பார்த்து கடுப்பு ஆகி இருக்கவேண்டியிருக்காது .
எடப்பாடி அமைச்சரவையை `மங்குனி மந்திரிசபை’ என்று நெட்டிசன்கள் சட்டி இல்லாமலே வறுவறுவென்று வறுத்து எடுக்கிறார்கள். ஆனால், யார் எவ்வளவு உளறினாலும், ஊர் உலகமே கிண்டலடித்தாலும் மந்திரியாக மட்டும் தொடர்கிறார்கள். இந்த உளறலுக்கு எல்லாம் கட்டம் கட்டியிருப்பார்.
லேட்டஸ்ட்டாக, தான் வந்த சினிமா துறையை சார்ந்தவரை(ஜோதிகாவை) யாரும் விமர்சிக்க அனுமதித்து இருக்கமாட்டார். விமர்சிக்க எவருக்கும் முதலில் துணிவு இருந்திருக்காது.
கரோனா பாதிப்பு விஷயத்தில் மத்திய அரசிடம் கேட்காமலேயே தமிழகத்திற்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டிருக்கும்.
முக்கியமாக சாதி மற்றும் சமயங்களிடையே தற்போது போல் விரிசல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கவிடாமல் பார்த்துக்கொண்டிருப்பார்.
நன்றி.