தெளிவத்தை ஜோசப் காலமானார்

பெப்ரவரி 16, 1934 ஆண்டு பிறந்த அவர், ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். அத்துடன் இலங்கை தமிழ் ஊடகங்களால் பல்வேறு  ஆக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதேபோல் இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய காற்று திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கொழும்பில் நாளைய தினம் (22) இடம்பெறவிருந்த “குளிரும் தேசத்துக் கம்பளிகள்” புத்தக வெளியீடும் அவரது தலைமையில் இடம்பெறவிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.