நேற்று முன்தினம் வடமராட்சியிலுள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் பல சேர்ந்து மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்ததுடன், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடர்பில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அவரது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதன்போது, சுப்பர்மடத்தில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் தொடர்பில் மன்னிப்புக் கோரியதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அது உண்மைக்கு புறம்பானது என்றும் சுப்பர் மடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
(Tamil Mirror)