அத்துடன், இந்திய இழுவைப் படகுகாளால் பாதிக்கப்பட்ட தமது மீனவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், அவர் வலியுத்தினார்.
மன்னாரில், இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், உர விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானாத்தால், இலங்கை பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
‘விவசாயிகளுக்கு உரத்த வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுடனும், விவசாய அமைப்புக்களுடனும் கலந்துரையாடி வருகிறோம்’ எனவும், அவர் தெரிவித்தார்.