டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்

3,000த்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கூடியிருந்த மைதானத்தில் பேசிய கமலா ஹாரிஸ், குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு குற்றவாளி என்று குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு சிகிச்சைகளை எளிமையாக அணுகுதல், ஏழை குழந்தைகள் மறுவாழ்வு, அனைவருக்குமான மருத்துவ சேவைகள் போன்றவற்றிற்கும் முன்னுரிமை அளித்து அவர் பேசினார்.

இந்நிலையில், கமலா ஹாரிஸுக்கு பதிலளிக்கும் விதமாக வடக்கு கரோலினா பரப்புரையில் பேசிய ட்ரம்ப், 2 கோடி வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைய கமலா ஹாரிஸ் அனுமதித்ததாக குற்றம் சாட்டினார். இதனிடையே ட்ரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது