ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்துடன் பகல் முழுவதும் இருந்து விட்டு இரவில் ஜனாதிபதியுடன் சேர்ந்து பொழுது போக்கும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்றனர். இந்த ஐக்கிய மக்கள் சக்தியினர் பாம்பு போன்றவர்கள். எவ்வாறாயினும் கட்சியுடன் உறுதியாயிருக்கும் எம்மை நம்புவதற்கு பதிலாக கட்சித் தலைவர் அவர்களைத் தான் நம்புகின்றார்.
“தயவுசெய்து திரு. பிரேமதாசவிடம் பேசி அவரை சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்” என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் ஹிருணிக்கா தெரிவித்தார்.
“விக்கிரமசிங்கவைச் சந்திப்பவர்கள், தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இவர்கள் SJB பதவியில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதியுடன் இணைவார்கள். அவர் என்னை அழைத்தால் நான் சில விஷயங்களைச் சொல்வேன் என அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் பேசுவதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
”ஆரம்பத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார போன்றோர் கட்சி தாவிய போது ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால் யாருக்கும் ஜனாதிபதியுடன் இணையும் தைரியம் வந்திருக்காது” என ஹிருணிக்கா தெரிவித்தார்.