அதில் அமெரிக்காவுடனான நேரடி ஒப்பந்தத்திற்கு ஈரான் முன்வரவேண்டும் என கூறியிருந்தார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு மறுப்பு தெரிவித்தால் ஈரான் மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ட்ரம்பின் இந்த கடிதத்துக்கு பதில் அளித்த ஈரான் நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான்,
“அமெரிக்கா உத்தரவுகள் வழங்குவதையும், எச்சரிக்கை விடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒருபோதும் உங்களிடம் (அமெரிக்கா) நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அதேசமயம் மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் ஓமன் மூலமாக ஈரான் அரசாங்கம் ட்ரம்புக்கு பதில் கடிதமும் அனுப்பி உள்ளது. அதில், அதிகபட்ச அழுத்தம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களின் கீழ் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதே தங்கள் நாட்டின் கொள்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்தது, ட்ரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல் நான் அவர்களுக்கு இரண்டாம் நிலை வரிகளை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் ஈரான் தனது செயல்பாடுகள் மூலம் பதில் அளித்துள்ளது. அதாவது ஏவுகணைகளை தயார்நிலையில் வைக்கத் தொடங்கியிருக்கிறது.
உலகெங்கிலும் அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்ட ஏவுகணைகளை ஈரான் இராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளதாக, அரசு ஊடகமாக தெஹ்ரான் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏவுதலுக்கு தயார்நிலையில் உள்ள ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன என்றும், அவை வான்வழித் தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.