மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவ, நோர்டன் பிரிட்ஜ், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து தினசரி பாடசாலை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 30 தனியார் பஸ்கள் மற்றும் வான்களை சோதனையிடுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகருக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
கடந்த 14 நாட்களாக இப்பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் கடுமையான சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை நடத்திய பொலிஸார் 12 வாகனங்களை சேவையில் இருந்து அகற்றி, அவற்றின் வருவாய் உரிமங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வாகனங்களைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் கவலைகளை உள்ளூர் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து சோதனைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.