அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ உச்ச நீதிமன்றம் இது குறித்த தீர்ப்பினை அறிவித்துள்ளது. அமெரிக்க அரசியல் அமைப்பின் பிரகாரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.