களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் சிறப்புப் பட்டதாரியாகி, தொல்லியல் பேராசிரியர் சேனக பண்டாரநாயக வழிகாட்டலில், பல தொல்லியல் ஆய்வுகளை செய்தவர்.
இவரின் ஈழ மன்னன் குளக்கோட்டான் பற்றிய ஆய்வுகள், என்னை வியப்பில் ஆழ்த்தியவை.
குளக்கோட்டான் தரிசனம் ,மாகோன் வரலாறு , ஈழ மன்னர் குளக்கோட்டானின் சமய – சமூக பணிகள், விபுலாநந்தரின் தொல்லியலாய்வுகள் என்ற நூல்கள் முக்கியமானவை.
எமது சமூகத்தில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, தொல்லியல் ஆய்வுகளை தேடிச் செய்வது, எத்தகைய சிரமம் என்பதை நாம் அறிவோம்.
அக்காவின் ஊரான கன்னன்குடா, சிறுவயதில் எனக்கு பிடித்த இடம். (என் மூத்த அண்ணர் ஒருவருக்கு அக்கிராமம் மனதை கவர்ந்துவிட, அங்கேயே தன் குடும்பத்தோடு, இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.)
அக்கா மட்டக்களப்பில் நீண்ட காலமாக கலாச்சார உத்தியோகத்தராக கடமையாற்றியவர். அத்தோடு, குறிப்பிட்ட காலம் பாரளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
அக்கா, பாரளுமன்ற அரசியலில் ஈடுபடாமல், தொல்லியல் ஆய்வுகளில் கவனத்தை செலுத்தியிருந்தால், இன்னும் சிறப்பு மிக்க ஆய்வுகள், எமக்கு கிடைத்திருக்கும்.
அக்காவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி..!