குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு தேவையான மணல் நியாயமான விலையிலும் தட்டுப்பாடின்றியும் கிடைப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதனடிப்படையில், வடமாராட்சி கிழக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வினை மேற்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக பெரும்பாலான மணல் திட்டுக்கள் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையினால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிராந்திய அதிகாரிகள் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், நிறைவேற்று நிலை அதிகாரிகளும் zoom காணொலி ஊடாக கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கும், மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அடையாளப்படுத்தப்பட்ட மணல் திட்டுக்களில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைத்து திணைக்களங்களும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பொலிஸார் மற்றும் அதிகாரிகரகளிடம் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலோசனைகளையும் வழங்கினார்.