போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது முகப்புத்தக பதிவில் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார், அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து மே மாதத்தில் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.
தற்போது குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21,000 ஆக உள்ளது.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் இந்த அதிகரிப்பு ஒத்துப்போகிறது என்றும், அடுத்த ஆண்டு ரூ. 35,000 ஆக மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார்.