தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நேற்று கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.