* முதல்வர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 6,100 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் 2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி 700 கோடி ரூபாவாக உயர்த்தப்படும்.
* அரசுப் பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் 50 கோடி ரூபாவாக செலவில் உருவாக்கப்படும்.
* அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 2,000 ரூபா வழங்கப்படும்.
* சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* சென்னை சைதாப்பேட்டை – தாடண்டர் நகரில் 110 கோடி ரூபா செலவில் 190 குடியிருப்புகள் கட்டப்படும்.
* 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,500 கோடி ரூபாவில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். 1 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்படும்.
வரவு செலவு திட்ட உரையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,
இந்தியாவின் 2 ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழகம் என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், ‘பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. மனிதநேயம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு நடைபோடுகிறது. சமநிலை தவறாமல் தமிழகத்தை வழிநடத்துவோம் என்றார்.