தமிழர்களுக்கான மரணப் பொதியே ’13’

“தமிழ்த் தேசமும் இறைமையும் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வு எட்டப்படும் வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த மக்களுடன் தொடந்து குரல் கொடுக்கும். தென்தமிழீழ மண்ணில் நின்று கொண்டு இந்த மக்கள் செய்யும் பிரகடனம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 4 கரிநாள் ஒற்றையாட்சியையும் 13ஆவது திருத்தத்தை ஒழுப்போம் என்ற தொனிப் பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு நகரில் சனிக்கிழமை (04) நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கைத் தீவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் இந்தியாவினுடைய நலன்கள் மற்றும் அமெரிக்கா ஜரோப்பிய நாடுகளின் பூலோக நலன்களை பேனுவதற்கு 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற பெயரிலே இந்தியாவும் இலங்கையும் கூட்டுசதி செய்து 13ஆ திருத்த சட்டத்தை உருவாகினர்.

அதன் மூலம் மாகாணசபை கொண்டுவரப்பட்டு, அதன் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியிடம் இருக்கின்றது. அவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இருக்கின்றது மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ எந்த அதிகாரமும் இல்லை. 

மாகாணசபைக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதுடன் காணி பொலிஸ் அதிகாரம் கிடையாது என்பதுடன் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் என உயர் நீதிமன்றம் 30 தீர்ப்புக்களில் தெரிவித்துள்ளது.

2016 ஜனவரி மாதத்தில் இருந்து 2018 டிசெம்பர் மாத்துக்குள் ரணில் மைத்திரி நல்லாட்சி கலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற பெயரிலே ஒரு அரசியல்  அமைப்பு வரைவை உருவாக்கினர்.

அந்த அரசியல் அமைப்பில் இரா.சம்பந்தன் பௌத்த மதம் முதன்மை மதம் என எழுத்துமூலமாக கையொப்பம் வைத்துள்ளார். இது தமிழர்களுக்கு செய்யப்பட்ட மிகப் பெரும் துரோகம்.

அதேபோல, வடக்கு, கிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும் சமஷ்டியை கைவிடுவதற்கு இணங்கியுள்ளதுடன் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எங்கள் மீது திணிக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டுவருவதற்கு இனங்கியுள்ளனர். அதை நாங்கள் இன்று நிராகரிக்கும் வகையில் இந்த பேரணியை செய்துள்ளோம்.

13ஆவது திருத்த சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விக்கினேஸ்வரன் அணியினர் நிற்கின்றனர். ஏனையவர்கள் அரசாங்கத்துடன் நின்று கொண்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இன்று அவர்களும் சுதந்திர தின கரிநாள் என்ற பேர்வையில் முதலைக் கண்ணீர்  வடிக்கின்றனர். ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து ஒற்றையாட்சிக்குள் 13 ஏற்றுக் கொண்டு தயாராகிவிட்டனர்.

மக்கள் தங்களை இனங்கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ரணிலுக்கு எதிரி போல் நாடகமாடிக் கொண்டுள்ளனர். இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

நான் இனப்பிரச்சனையை ஓராண்டில் தீர்க்கப் போவதாகவும் தமிழ் தலைவர்கள் ஒத்துழைக்குமாறும் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஓர் அழைப்பு விடுத்தார் 

இதன்போது ரணிலுக்கு பதிலளித்த எம்.ஏ. சுமந்திரன், இனப்பிரச்சனை தீர்வுக்கு எடுக்கின்ற முயற்சியை வரவேற்பதாகவும் 2016 நல்லாட்சி காலத்தில் வரையப்பட்ட அரசியல் அமைப்பின்  அடிப்படையில் தீர்வுகான முற்பட்டால் ஓராண்டு தேவையில்லை 3 மாத்தில் தீர்வு வந்துவிடும் என்றார்.

இந்தியா தனது பிராந்திய நலன்களை பேணுவதற்காக தமிழர்களை 13 ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்தித்து தமிழர்களை அழிக்கின்ற நடவடிக்கைக்கு தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

தமிழர்களிடம் வாக்குகளை பெற்று கொண்டு பிரதிநிதிகள் என்று சொல்லுகின்றவர்கள் இந்தியாவிடம் சலுகைகளை பெற்றுக் கொண்டு 13ஐ நடைமுறைப்படுத்தல் என்ற பேர்வையிலே ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றனர்

இதனை மக்களும் புரிந்து கொள்ளவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு பலியாககூடாது விழிப்படைய வேண்டும் என்பதுடன் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.